டெல்லியில் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊபர் டாக்ஸியில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணி. அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் உள்ள தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டவுடன் அந்த ஓட்டுநர் மிகவும் கோபமடைந்து நீ ஒரு பாகிஸ்தானி என்று கூறினார்.

அதோடு அவர்களை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை அந்தப் பெண் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்களை சாலையில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதுதான் மோடிஜியின் இந்தியாவா என்று அந்த பெண் வீடியோவில்  கேட்கிறார். அந்த ஓட்டுநர் அவர்களுடன் தகராறு செய்த போது அதற்கு அந்தப் பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.