நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகிறார்கள். ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற செய்தி உள்ளது. நல்ல வாழ்க்கை தேடி பலர் தாய்நாட்டை விட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கே பாகுபாடு, இனவெறி பேச்சு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு கனடியர் ஒரு இந்தியரை திட்டும் காட்சி உள்ளது. அந்த கனடியர், “நீ கனடியன் அல்ல” என்று கோபமாக சொல்கிறார். இந்தியர் தான் இந்தியாவை சேர்ந்தவர் என்று சொல்ல, கனடியர் மேலும் கோபப்பட்டு இந்தியாவுக்கு திரும்ப சொல்லி அவரை திட்டுகிறார். இந்தியர் இதை மொபைலில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனடா இந்தியர்களுக்கு பிடித்த நாடுதான். ஆனால் அங்கு வாடகை, வேலைவாய்ப்பு பிரச்சனை அதிகரித்துள்ளது. இந்தியா – கனடா இடையேயான அரசியல் பிரச்சனையும் இந்தியர்களுக்கு தொல்லை கொடுக்கிறது.