தமிழகத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி நடபாண்டில் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். மேலும் கைத்தறி துணிகளின் விற்பனையை அதிகரிக்க சென்னை தீவுத்திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் ஜவுளிகள் தொடர்பான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.