
அமெரிக்க நாட்டின் லூசியானா மாகாணத்தில் செயின்ட் லான்ட்ரி பாரிஸ் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி பலரது நெஞ்சையும் பதை பதைக்க வைத்துள்ளது. அதாவது ஒரு பெண்மணி வேகமாக அந்த தெருவில் நடந்து வருகிறார்.
அவர் தன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய பழுப்பு நிற நாய் குட்டியை குப்பைத் தொட்டியில் போட்டார். அதோடு அங்கு படுத்திருந்த மற்றொரு நாய்குட்டியையும் குப்பை தொட்டியில் தூக்கி போட்டார். பின்னர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் அந்த நாய்க்குட்டியின் நிலைமை என்ன ஆனதோ என பதிவிட்டு வருகிறார்கள்.