பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் F**k the police என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதாவது பெங்களூருவில் டாட்டு சூத்ரா என்ற ஸ்டூடியோ வைத்திருக்கும் ரித்தேஷ் அகாரியா என்ற நபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவருடைய நெஞ்சில் F**k the police
என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்து உள்ளார் .

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் போலீசில் கவனத்திற்கு சென்றுள்ளது. இது தொடர்பாக  ரித்தேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் நெஞ்சில் F**k the police  என்று எழுத சொல்லியதாக கூறியுள்ளார் .இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அவர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.