நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி பணியின் போது அருண் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து சென்னை துறைமுக கண்டெய்னர் ஓட்டுனர் சங்கம் மூலம் நிதி திரட்டி உள்ளனர். இதில் சுமார் 3000 பேரிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அருண் குடும்பத்தினரிடம் வழங்கினர்.