கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ். 31 வயதான இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சந்தோஷ் தோட்டத்திற்கு சென்றபோது கலாமணி தன்னுடைய மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த கணவர் சந்தோஷ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டின் பக்கத்திலிருந்து கிணற்றில் ஓரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்ததில் கலாமணி மற்றும் குழந்தை இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் .இதனை அடுத்து தீயணைப்பு துறை  விரைந்து வந்து இரண்டு உடல்களையும் மீட்டனர் .

அப்பொழுது கலாமணி தன்னுடைய மார்போடு சேர்த்து மகள் அஷ்விகாவை துணியால் இறுக்கமாக கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.