மும்பையில்  குர்லா பகுதியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்ப தகராறில் பர்வேஸ் சித்திகி என்பவர் தனது 4 வயது மகளை கொலை  செய்துள்ளார்.  அதாவது சம்பவத்தன்று, சித்திகி மற்றும் அவரது மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் முதலில் தனது மனைவியை தாக்கியதோடு, பின்னர் தன்னுடைய மகளை தரையில் தள்ளியுள்ளார். இந்த தாக்குதலில் குழந்தை பலத்த காயமடைந்ததால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு மருத்துவர்கள்  இறந்ததாக கூறியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பர்வேஸ் சித்திகியை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், இது ஒரு திட்டமிட்ட கொலையா? அல்லது கோபத்தின் காரணமாக ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.