
தெலுங்கானா மாநிலத்தில் சிவா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இதில் லட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவா திடீரென ஒரு விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அவர் கர்நூல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் லட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் சிவா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மேலும் தந்தை இறந்த சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும்போதே அந்த குழந்தை தந்தையை பறிகொடுத்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கணவனின் இறப்பு மறுபுறம் குழந்தை என அந்தப் பெண் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.