திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வபெருமாளை கைது செய்தனர்.