மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேவிட் ராஜ்(10). இவர் ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல ஆண்டனி டேவிட் ராஜ் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அதே அடுக்குமாடி குடியிருப்பில் நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு ஆண்டனி டேவிட் ராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஆண்டனி டேவிட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.