
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி இளம் பெண் எழும்பூர் பகுதியில் இருக்கும் ஒரு துணி கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் பெண்ணிடம் தவறான முறையில் சைகை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வடமாநிலத்தைச் சேர்ந்த அசோக் தாகூர் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.