
சென்னை திருவொற்றியூர் பகுதியில் விஜயன் (26)-பவித்ரா(24) ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். இவர்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று காலை முதல் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.