
நெல்லை மற்றும் சென்னை இடையே செப்டம்பர் 28 இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை காலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஒன்பது ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் அதில் நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மற்றும் சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கிய நிலையில் இரு மார்க்கங்களிலும் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.