
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.