ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும்  நிலையில் நடந்தது  அவரது உடல்நிலை  குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தோனி முழுமையாக குணமடையாத முழங்கால் பிரச்னையை சமாளித்து வருகிறார் என்பது தெரிந்த விசயம்தான். எனினும், இந்த சீசனில் முதல் முறையாக அவர்  பொதுவெளியில்  வெளிப்படையான நடந்து செல்லும்  விதம்  ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் கீப்பிங் செய்யும் போதும், அப்துல் சமதின் ரன்அவுட்  செய்த பின்பும், அவர் சமநிலை சற்றே இழந்த படியே காணப்பட்டார்.

“>

 

பின்னர் பேட்டிங் வந்தபோது, ஷிவம் துபேயுடன் சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்து   தோனி வெற்றிகரமாக விளையாடினாலும் , சிங்கிள்கள் எடுக்காமல் பெரிய ஷாட்களையே நம்பியிருந்தார். போட்டி முடிந்தபின் அவர் டிரஸ்ஸிங் ரூமிலிருந்து மேடைக்கு செல்லும் போதும், அங்கிருந்த படிக்கட்டுகளில் இறங்கும்போது நன்கு நடக்க முடியாமல் சிரமப்பட்டதோடு, “Player of the Match” விருது பெறும் போதும் தடுமாறும் தோற்றத்தில் இருந்தார்.

இதையடுத்து, லக்னோவிலுள்ள ஹோட்டலுக்கு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, தோனியின் உடல்நிலை குறித்த கேள்வி  எழுப்பியுள்ளது. இருப்பினும், சிஎஸ்கே அணியின் மேலாளர் குழு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.