தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஆஷிக் அகமது (38) மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3  நாட்கள் விடுப்பு எடுத்த அவர், தனது குடும்பத்துடன் ராமேஸ்வரத்துக்கு அருகே உள்ள அரியமான் பீச்சுக்கு காரில் சென்றிருந்தார். நேற்று அங்கிருந்து மதுரை திரும்பும் போதே பரமக்குடி அருகே நென்மேனி வளைவுப் பகுதியில், எதிரே வந்த  சின்னக்கடை தெருவை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரது காரும், காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் ஏட்டு ஆஷிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் இரு கார்களில் இருந்த 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.