நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதன்பிறகு இன்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு புதிய அரசு பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் 30 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்கும் நிலையில் முன்னதாக ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் 3 முறை பிரதமராக இருந்துள்ளனர்.

இவர்களின் வரிசையில் தற்போது 4-வது நபராக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை ஜவர்கலால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். இதேபோன்று கடந்த 1966 முதல் 1977 வரை 2 முறையும், கடந்த 1980 முதல் 1984 வரை வரை ஒரு முறையும் பிரதமராக இருந்துள்ளார். இதேபோன்று அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1996, 1998, 1999 முதல் 2004 வரை 3 முறையாக பிரதமராக இருந்துள்ளார். மேலும் இவர்களின் வரிசையில் தற்போது நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.