
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்னுடைய நண்பன் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவர் இப்போது வந்தால் கூட பேசுவேன். ஆனால் அரசியல் ரீதியான கருத்துக்கள் என்பது நேற்று ஒன்று இன்று ஒன்று நாளை ஒன்று என்று இருக்கக் கூடாது.
தெளிவான மனநிலையில் ஒரு கருத்தினை சொல்ல வேண்டும். கூட்டணியை பொறுத்தவரையில் திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் இருக்கிறது. ஒரு சிறு துரும்பாக இருந்தாலும் எங்களை பொறுத்தவரையில் அதை மதிப்பது முக்கியம். ஒரு கட்சி என்ற முறையில் நாம் உரிய மரியாதை கொடுப்போம்.
ஆனால் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அந்த மரியாதையை கொடுக்க தெரியவில்லை. அவர்கள் ஒரு கசப்பான மனநிலையில் இருக்கும் நிலையில் திருமாவளவனின் கருத்தும் அதைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலில் ஒரு மாற்றம் வரும். கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும். மேலும் இன்னும் பல காட்சிகள் கூட்டணிகள் இணைய பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதால் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார்.