தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விழுப்புரத்தில் நடைபெற்ற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர கூட்டணி பற்றி எல்லாம் தேசிய தலைமை மட்டும் தான் முடிவு செய்யும்.

எனவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கூட்டணி தொடர்பாக பொதுவெளியியல் கருத்துக்களை சொல்ல வேண்டாம். அதேபோன்று சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் என எதிலும் கூட்டணி தொடர்பாக தொண்டர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றார்.

மேலும் நேற்று எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரனும் தொண்டர்களுக்கு அதே அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.