தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதாவது நேற்று அவர்கள் யார் அந்த தியாகி என்று பேட்ஜ் அணிந்து வந்த நிலையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் சபாநாயகர் அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பேச அனுமதி கொடுக்க முடியாது என்றார்.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை சபாநாயகர் சட்டசபையில் இருந்து ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் தான் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். மேலும் சட்டசபையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளனர்.