
இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன். இவர் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு 73 வயது ஆகும் நிலையில் நேற்று காலமானதாக செய்தி வெளியானது.
ஆனால் அதனை குடும்பத்தினர் மறுத்திருந்த நிலையில் தற்போது அவர் காலமாகிவிட்டார். இன்று காலை தான் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவருடைய மரணம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் கிராமிய விருது போன்ற பல்வேறு விருதுகளை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.