
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இரண்டரையாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆண்டுகளில் செய்யவேண்டிய சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் பாஜகவில் தனது கட்சியை சரத்குமார் இணைத்து குறித்த கேள்விக்கு, இரண்டு மணிக்கு அவர் கனவுகண்டு கொண்டிருக்கிறார். அந்த கனவு எப்படி பலிக்கிறது என பார்க்கலாம். சினிமாவில் நடிப்பது போல் அவர் கனவுகண்டு வருகிறார் என சிரித்தபடி கூறி சென்றுள்ளார்.