
ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் ஃப்ரீசர் பழுதானதால் சிறுவனின் சடலம் நோயாளிகள் அறையில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ஏனாம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரேத கிடங்கில் ப்ரீசர் பல மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 14 வயது சிறுவனின் உடல் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் பிரேத கிடங்கின் ஃப்ரீசர் வேலை செய்யாததால் சிறுவனின் சடலம் நோயாளிகளின் அறையில் பல மணி நேரம் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குள் பிரீசர் சரி செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்ததால் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.