மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிச்சைக்காரர் ஒருவர்  மதுக்கடையில் நின்று பிச்சை எடுக்கிறார். அங்கு அவர் பிச்சை எடுக்கிறார் என்று பார்த்தால் தன்னுடைய கையில் இருக்கும் பணத்தை கொடுத்து மது வாங்குகிறார்.  இதில் அவருக்கு பலமுறை தானம் செய்த நபர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த பிச்சைக்காரர் ஒரு மதுபாட்டிலை வாங்கி தன்னுடைய பைக்குள் வைத்துக் கொண்டு செல்கிறார்.  இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இதனால் தான் உண்மையிலேயே கஷ்டப்படும் யாருக்கும் உதவுவதில்லை என்று கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.