
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. அதாவது பிளாட்ஃபார்ம் கட்டணம் தற்போது ஒரு ஆர்டருக்கு ரூ.2 வீதம் வசூலிக்கப்படும் நிலையில், கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆர்டர் செய்யும் உணவின் விலை ரூ.200 (வரி உட்பட) என்றால், டெலிவரி கட்டணம் ரூ.40, பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.3 என மொத்தமாக ரூ.243 வசூலிக்கப்படுகிறது. இது பகல் கொள்ளை என வாடிக்கையாளர்கள் மனம் குமுறுகின்றனர்.