உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியதால் சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் அந்த பகுதியில் நிலச்சரிவு என்பது ஏற்படுகிறது. இதனால் இதனை சரி செய்யும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் சீட்டுக்கட்டு போல் மலைப்பகுதி சரிந்து விழுந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.