பகுதி நேர இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நடபாண்டில் குறைந்துள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் மொத்தம் உள்ள 1400 இடங்களுக்கு வெறும் 720 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக கோவை தொழில்நுட்பக் கல்லூரி தெரிவித்துள்ளது. பகுதி நேர இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புக்கு மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது தெரிகிறது.