திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த வந்த நடிகை ரோஜாவோடு பெண் தூய்மை பணியாளர்கள் புகைப்படம் எடுக்க வந்தபோது கையை காண்பித்து தள்ளி நிற்க சொன்ன வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும் . அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை வருஷாபிஷேகம் நடைபெறும் .அந்த வகையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி உத்தர நாளான நேற்று ஆனி உத்தர வருஷாபிஷேகம் நடைபெற்றது/

இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் அவருடைய கணவர் ஆர்கே செல்வமணியும் சாமி தரிசனம் செய்தார்கள். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது ஏராளமான பக்தர்கள் கோவில் பணியாளர்கள் ரோஜாவிடம் சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது கோயிலில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர்கள் ரோஜாவோடு புகைப்படம் எடுக்க விரும்பி அவருடைய பக்கத்தில் நெருங்கி வர முயன்றுள்ளனர். அப்போது ரோஜா தாய் நிற்க சொல்லி சைகை காட்டியுள்ளார் . இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதனை பார்த்த நெட்டிசன்கள்  இதுகுறித்து ரோஜா விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.