உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள ஜகௌரா பகுதியில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை, அண்டை வீட்டில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் வெறித்தனமாக தாக்கியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பல இடங்களில் கடித்ததோடு, மிகக் கொடூரமாக அந்தக் குழந்தையின் அந்தரங்க உறுப்பை தன் பற்களால் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.

 

இதனால் குழந்தை வலியில் துடித்து படுகாயமடைந்த நிலையில் இருந்தது. உடனடியாக பெற்றோர் அவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்தவர்கள் முதல் நிலை சிகிச்சை அளித்து, குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியுள்ளனர்.

 

ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், குழந்தை உயிரிழந்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அந்த 12 வயது சிறுவன் பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற போது மற்ற குழந்தைகள் விரட்டியதால் வீட்டில் தனியாக இருந்த அந்த குழந்தையை கடித்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.