மராட்டிய மாநிலத்தில் உள்ள விரார் புல்பாடா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மனைவிக்கு பக்கத்து வீட்டுக்காரரான சேகர் கதம் என்பவருடன் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விஷயம் சமீபத்தில் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

இதனால் அவர் தன் மனைவியை கண்டித்ததோடு சேகருடன் தகராறு செய்துள்ளார். இதனால் சேகர் அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார். இதைப் பற்றி தெரிந்து கொண்ட அந்த பெண் தன் கணவரை கண்டித்ததற்காக சேகர் மீது கோபம் கொண்டதோடு அவருடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று சேகர் தகறாறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.