
தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் தனுஷின் தந்தை வழி குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் தன மகன்களுடன் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், நடிகர் தனுஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் ஊர் மக்களிடம் பேசினால் தானே நன்றாக இருக்கும்.
ஆனால் அவர் யாரிடமும் பேசாமல் சென்றுவிட்டார் என்று கூறினர். இருப்பினும் அவர் அமைதியான முறையில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு சங்கராபுரத்தில் கருப்புசாமி கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவில் தனுஷின் தாய் வழி குலதெய்வம் என்று கூறப்படுகிறது. அங்கேயும் தனுஷ் அவரது 2 மகன்கள், தந்தை, தாயார், சகோதரர், மற்றும் சகோதரிகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை வழிபட்டுள்ளார்.