
முஸ்லிம் மக்களின் மிக முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023 இந்த பண்டிகை பல நாடுகளிலும் ஜூன் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மிசோரம் அரசு இடுல் ஹுஜா கொண்டாட்டத்தை முன்னிட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஜூன் 27 முதல் 29 வரை விடுமுறை விட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்துள்ளது. அதன்படி மிசோரம் மாநிலத்தின் பொது நிர்வாக துறை மிசோரம் மாநிலத்தில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஜூன் 29ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல நிதி நிறுவனங்களும், வங்கிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.