
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. முஸ்லிம் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஓமலூர் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அதன் பிறகு ராணிப்பேட்டையில் உள்ள சந்தையில் ரூ.4 கோடிக்கும், கிருஷ்ணகிரி வாரச்சந்தையில் சுமார் ரூ.8 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மேலும் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று 8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில் ஒரு ஆடு அதிகபட்சமாக சுமார் 30,000 முதல் 40 ஆயிரம் வரை விலை போனது. இது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.