
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மகா கும்ப மேளா தொடங்கிய நிலையில் இந்த மாதம் 26-ம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் இந்த விழா நடைபெறும். இங்கு திருவேணி சங்கமத்தில் இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிய நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக ஒரு மகன் செஞ்ச விஷயம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
அதாவது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வயதான தாயை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு கிளம்பி சென்று விட்டார். கிட்டத்தட்ட வீட்டிற்குள் இரண்டு நாட்களாக பசியில் வாடிய அந்த 68 வயது மூதாட்டி பிளாஸ்டிக் தாள்களை சாப்பிட முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து அவரை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.