வெள்ளரி , குடைமிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமை குடில் மற்றும் நிழல் வளைகுடில் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்ககம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதர விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியமாக மொத்தம் 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.