
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை விஜய் தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜய் முன்னதாக பெரியார் நினைவு நாளில் சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய அவர் தற்போது சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த முறை கட்சி அலுவலகத்தில் மரியாதை செலுத்திய விஜய் அடுத்த முறை பசும்பொன் நகருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/pLo9FFF4S4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024