
கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் குழந்தையை வாங்கியவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயன் என்பவர் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் மகேஷ் குமார் மற்றும் அஞ்சலி குழந்தை ஆசை காண்பித்துள்ளார். அதன் பிறகு இருவரும் சட்டப்படி குழந்தையை பெற்றுக் கொடுப்பதாக கூறிய நிலையில் போலி ஆவணங்களை கொடுத்து குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் ரூ.2 1/2 லட்சம் கொடுத்து குழந்தை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விஜயனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.