
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளவர். நாயகன், இரும்புத்திரை போன்ற படங்களில் அவரது கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் மறக்கமுடியாதது.
80 வயதானாலும் அவரது நடிப்பில் இருக்கும் ஆர்வம் குறையவில்லை. சமீபத்தில் வெளியான அரண்மனை 4, இந்தியன் 2 போன்ற படங்களில் அவர் தனது திறமையை வெளிக்காட்டினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்த அவர், நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி கணேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் நடிகர் மணிகண்டன். கடந்த “2010-ஆம் ஆண்டில், நடிகர் மணிகண்டன் தன் சின்ன வயதில் தன்னுடைய குறும்படம் ஒன்றிற்காக கணேஷிடம் நடிக்க அன்புடன் கேட்ட போது, டெல்லி கணேஷ் தனது நீண்டகால அனுபவத்தை பொருட்படுத்தாமல் அந்த வாய்ப்பை ஏற்றார்.
எந்த வசதிகளும் இல்லாமல், எந்த குறையும் கூறாமல் எனக்காக அவர் நடித்தார். அவரது பண்பு யாருக்கும் வராது. படப்பிடிப்பின் போது டெல்லி கணேஷ் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய வேளை, மணிகண்டன் அவருக்கு போன் செய்தபோது, “சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பயப்படாதே, உன் படத்தை முடிக்காமல் சாகமாட்டேன்,” என்றார். சீனியர் நடிகராக இருந்தும் நம் அனைவருக்கும் அவர் ஒரு பாடமாக இருந்தார் என கூறி மணிகண்டன் கண்கலங்கினார்.