
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய படத்தின் பூஜையின் போது பேட் கேர்ள் படம் குறித்து ஆவேசமாக பேசிய காட்சிகள் வைரலாகி வருகிறது. அதாவது, “பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஏராளமான பாலியல் தொல்லை பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பேட் கேர்ள் படம் போல்டான படம் இல்லை. சினிமாவில் நடிகைகளை படம் நடிக்க எங்க கூப்பிடறாங்க.
பலரும் படுக்க கூப்பிடுறாங்க. இங்கே உள்ள மோசமான விஷயத்தை எல்லாம் முதலில் மாற்றாமல் தேவையில்லாமல் இளம் பெண்களை கெடுக்கும் விதமாக படங்களை எடுப்பது ஏனென்று தெரியவில்லை. அதை பல பெரிய பிரபலங்களும் ஆதரிப்பது தான் நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. தம் அடிப்பது, சரக்கடிப்பது பெண்களை தவறாக காட்ட முயற்சிப்பது எல்லாம் பெண்ணுரிமை கிடையாது. சுதந்திரத்தை தவறாக பெண்கள் பயன்படுத்தக் கூடாது. அதேபோல மைனர் பெண்கள் மீது அதனை திணிக்கும் இது போன்ற படங்களை ஆதரிக்கவே கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.