உத்திரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் தன் காதலியை பார்க்க வந்தார். அந்த வாலிபர் ஃபர்தா அணிந்து பெண் போல வந்துள்ளார். அவரின் பெயர் சந்த் புரா. அவர் பர்தா அணிந்து அந்தப் பகுதிக்கு சென்ற நிலையில் அவர் நடத்தையில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிலர் அவரை திருடன் என்று நினைத்த நிலையில் சிலர் குழந்தை கடத்தல் காரராக இருக்கலாம் என்று கூறினார். இதனால் அவரின் பர்தாவை அகற்றுமாறு வற்புறுத்தினர்.

பின்னர் பர்தாவை நீக்கிய போது அது பெண் இல்லை ஆண் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதார் அட்டையை காண்பிக்குமாறு கூறி அந்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வரும் வரை அந்த நபரை பிடித்து வைத்திருந்த அவர்கள் காவல்துறையினர் வந்தவுடன் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.