சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிஸ்டர் நன்றி என்ற பெயரில் செர்ஜி கோசன்கோ என்பவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகும் நிலையில் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டரில் தன் காதலியுடன் வருகிறார்.

அப்போது பணக்கட்டுகளை அவர் படிக்கட்டுகளாக வைத்து ஹெலிகாப்டரில் இருந்து தன் காதலியின் கையைப் பிடித்து பணக்கட்டுகளின் மேல் அவரை நடக்க வைத்து அழைத்து வருகிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பணத்தை இப்படியா அவமதிப்பது என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை 4.3 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.instagram.com/reel/CvSmE34M3nB/?utm_source=ig_embed&utm_campaign=loading