மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனைவில் உள்ள ஹடப்சர் என்ற இடத்தில் அமனோராவின் நவநாகரிக டவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூலை 17ஆம் தேதி 13 வது மாடியில் இருந்து குதித்து 14 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சிறுமையை படிக்காமல் விளையாட்டாக இருந்ததால் படிக்கக் கூறி அம்மா அதட்டியதால் விரக்தி அடைந்த சிறுமி இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகின்றது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.