நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி சர்ச்சையில் சிக்கி இருப்பது தொடர்பாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, ஏன் ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா.? எங்கள் ஊரில் யானை இல்லையா.? யானை என்பது ஒரு தனி மனிதனுக்கோ, அல்லது ஒரு கட்சிக்கோ, ஒரு மாநிலத்துக்கோ சொந்தம் கிடையாது. எங்கள் கட்சிக்கு நாங்கள் புலியை கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் அது தேசிய சின்னம் என்று கூறினார்கள். பின்னர் மயிலை கேட்டோம். அதுவும் தேசிய பறவை என்று கூறி நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கும்போது தேசிய மலரான தாமரையை மட்டும் ஏன் பாஜகவுக்கு கொடுத்தார்கள்.

இது பற்றி கேட்டபோது அவர்களிடம் பதில் இல்லை. ராஜராஜ சோழன் 60000 யானைப்படைகளை வைத்திருந்த நிலையில், அதை பார்த்தவுடன் எதிரி நாட்டுப்படைகள் போர் செய்யாமல் அப்படியே பின்வாங்கி விட்டனர். அப்படி இருக்கும்போது என்னுடைய தம்பிக்கு மட்டும் யானையை வைத்திருப்பதற்கு உரிமை இல்லையா. எங்கள் மரபு யானை படையை வைத்து வெற்றி வாகை சூடுவது. புறநானூறு படித்திருந்தால் வரலாறு தெரிந்திருக்கும். அது அவருடைய கொடி. அவர் பிரச்சனை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. எனக்காக பேச யாருமே கிடையாது. ஆனால் என் தம்பி விஜய்க்காக பேசுவதற்கு அண்ணன் நான் இருக்கிறேன் என்று கூறினார்.