படிப்பு என்பது வேலை சார்ந்ததாக இல்லாமல் திறமை சார்ந்ததாக மாற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறந்த கல்லூரியில் படித்தால் தான் வேலை வாய்ப்பு என்ற விதியை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த கல்லூரியில் பயின்றாலும் திறன் பயிற்சி மூலம் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் அளவுக்கு இளைஞர்களின் திறன் தற்போது மேம்பட்டு உள்ளது. படிப்பு என்பது வேலை சார்ந்ததாக இல்லாமல் திறமை சார்ந்ததாக மாற வேண்டும் என்றும் அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தான் பெருமை அடங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.