
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகை தமன்னா ஒரு பேட்டியில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கும்போது நடிகைகளை விட நடிகர்கள் தான் மிகவும் பதற்றமாகவும் சங்கடமாகவும் இருப்பார்கள். பொதுவாக அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க நடிகர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும் இதை நான் பலமுறை பார்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.