
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யற்றின்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு லீலா (77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஒரு மகன் அண்மையில் விபத்தில் இறந்துவிட்டார். இதில் ஒரு மகன் தனியாக வசித்து வரும் நிலையில் லீலாவின் மகள் பிந்துவுக்கு திருமணம் ஆகி கணவர் பிரிந்து சென்று விட்டார். அதனால் பிந்து தன் தாயாருடன் வசித்து வந்துள்ளார். அப்போதே பிந்துவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படுத்த படுக்கையானார்.
அவருக்கு லீலா பணிவிடைகள் செய்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் வறுமையில் வாடியுள்ளார். இதனால் லீலா மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் லீலா நேற்று முன் தினம் இரவு தன்னுடைய மகளின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அதன் பிறகு தீக்குளித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிந்துவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு லீலாவின் சடலத்தை வீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.