நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பட்ஜெட் நகலை அவரிடம் வழங்கினார். மேலும் பட்ஜெட் உரையைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ‌ இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார்.