நிதியமைச்சர் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட் 2024, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இத்துடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஆதரிப்பது மற்றும் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றில் தெளிவான முக்கியத்துவத்துடன், வைக்கப்பட்ட பட்ஜெட் 2024 குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பொருளாதார நிபுணர்; ஆனந்த் சீனிவாசன் “இது பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட்” மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாசித்த ஒன்றிய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே.! ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும் நிலையில், இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளதால் முற்றிலுமாக தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை இந்த பட்ஜெட்2024 குறித்து தெரிவித்து வருகின்றனர்.