நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக அரசு மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த நிதியானது நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் விகிதம் 2024 ஆம் ஆண்டு கால ஆண்டில் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.